ஆழ்ந்து தேடுங்கள்

தனியுரிமை வரையறைகள் மற்றும் எடுத்துக்காட்டுகள்

ஒரு செயலி சேகரிக்கக்கூடிய தரவு வகைகள் பற்றியும் டெவலப்பர் அல்லது மூன்றாம் தரப்பினரின் கூட்டாளர்கள் பயன்படுத்தக்கூடிய சில வழிகள் பற்றியும் மேலும் அறிக.


தரவுகளின் வகைகள்

தொடர்புத் தகவல்

பெயர்
முதல் அல்லது கடைசிப் பெயர்.

மின்னஞ்சல் முகவரி
ஹேஷ் செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி உட்பட மற்ற
மின்னஞ்சல் முகவரியும் அடங்கும்.

ஃபோன் எண்
ஹேஷ் செய்யப்பட்ட ஃபோன் எண் உட்பட மற்ற ஃபோன் எண்ணும் அடங்கும்.

இருப்பிட முகவரி
வீட்டு முகவரி, இருப்பிட முகவரி அல்லது மின்னஞ்சல் முகவரி.

மற்ற பயனர் தொடர்புத் தகவல்
செயலிக்கு வெளியே உங்களைத் தொடர்புகொள்ளப் பயன்படுத்தக்கூடிய பிற தகவலும் உள்ளடங்கும்.


உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி

உடல்நலம்
‘மருத்துவ சுகாதாரப் பதிவுகள் API’, ‘ஹெல்த்கிட் API’ மற்றும் ‘மூவ்மென்ட் டிஸார்டர் API’ ஆகியவற்றிலிருந்து வரும் தரவு அல்லது உடல்நலம் சார்ந்த மனித ஆராய்ச்சி அல்லது நீங்கள் வழங்கும் பிற உடல்நலம் அல்லது மருத்துவத் தரவு உட்பட மற்ற உடல்நலம் மற்றும் மருத்துவத் தரவும் அடங்கும்.

உடற்தகுதி
உடற்தகுதி மற்றும் உடற்பயிற்சித் தரவு.


நிதித் தகவல்

பேமெண்ட் தகவல்
பேமெண்ட் படிவம், பேமெண்ட் கார்டு எண் அல்லது வங்கிக் கணக்கு எண் போன்றவை. ஒரு செயலி பேமெண்ட் சேவையைப் பயன்படுத்தும்போது, அந்தப் பேமெண்ட் தகவல் செயலிக்கு வெளியே சேமிக்கப்பட்டிருந்தால், அந்தத் தகவல் இந்தப் பிரிவில் காட்டப்படாது.

கிரெடிட் தகவல்
கிரெடிட் மதிப்பெண் போன்றவை.

நிதி சார்ந்த தகவல்கள்
சம்பளம், வருமானம், சொத்துக்கள், கடன்கள் அல்லது பிற நிதி சார்ந்த தகவல்கள் போன்றவை.


இருப்பிடம்

துல்லியமான இருப்பிடத் தகவல்
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தசம இடங்களைக் கொண்ட அட்சரேகை மற்றும் தீர்க்கரேகையின் அதே அல்லது அதிக தெளிவுத்திறனுடன் உங்கள் இருப்பிடத்தை விவரிக்கும் துல்லியமான இருப்பிடத் தகவல்.

தோராயமான இருப்பிடத் தகவல்
'தோராயமான இருப்பிடச் சேவைகளில்’ உள்ள தகவல்கள் போன்ற, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தசம இடங்களைக் கொண்ட அட்சரேகை மற்றும் தீர்க்கரேகையை விட குறைவான தெளிவுத்திறனுடன் உங்கள் இருப்பிடத்தை விவரிக்கும் தோராயமான இருப்பிடத் தகவல்.


உணர்திறன்மிக்கத் தகவல்கள்

இனத் தரவு, பாலியல் நோக்குநிலை, கர்ப்பம் அல்லது சிறார் பிறப்பு விவரங்கள், குறைபாடு, மத அல்லது தத்துவ நம்பிக்கைகள், டிரேட் யூனியன் மெம்பர்ஷிப், அரசியல் கருத்து, மரபியல் தகவல் அல்லது பயோமெட்ரிக் தரவு போன்ற முக்கியமான தகவல்கள்.


தொடர்புகள்

தொடர்புகளின் பட்டியல், முகவரிப் புத்தகம் அல்லது சமூக வரைபடம்.


பயனர் உள்ளடக்கம்

மின்னஞ்சல்கள் அல்லது உரை மெசேஜ்கள்
தலைப்பு வரி, அனுப்புநர், பெறுநர்கள் மற்றும் மின்னஞ்சல் அல்லது மெசேஜின் உள்ளடக்கங்கள் ஆகியவை உள்ளடங்கும்.

புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள்
உங்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள்.

ஆடியோ தரவு
உங்கள் குரல் அல்லது ஒலிப் பதிவுகள்.

கேம்பிளே உள்ளடக்கம்
நீங்கள் கேமில் உருவாக்கும் உள்ளடக்கம் போன்றவை.

வாடிக்கையாளர் உதவி
வாடிக்கையாளர் உதவிக் கோரிக்கையின்போது, நீங்கள் உருவாக்கக்கூடிய தரவு.

பிற பயனர் உள்ளடக்கம்
நீங்கள் உருவாக்கக்கூடிய பிற உள்ளடக்கம்.


உலாவல் வரலாறு

இணையதளங்கள் போன்ற செயலியின் ஒரு பகுதியாக இல்லாதவற்றில் நீங்கள் பார்த்த உள்ளடக்கத்தைப் பற்றிய தகவல்கள்.


இதுவரை தேடியவை

செயலியில் நிகழ்த்தப்பட்ட தேடல்களைப் பற்றிய தகவல்கள்.


அடையாளங்காட்டிகள்

பயனர் ID
திரைப் பெயர், ஹேண்டில், கணக்கு ID, ஒதுக்கப்பட்ட பயனர் ID, வாடிக்கையாளர் எண், ப்ரோபபிலிஸ்டிக் அடையாளங்காட்டி அல்லது உங்களையும் உங்கள் கணக்கையும் அடையாளங்காண பயன்படுத்தக்கூடிய பிற பயனர் நிலை அல்லது கணக்கு நிலை ID போன்றவை.

சாதன ID
சாதனத்தின் விளம்பர அடையாளங்காட்டி அல்லது பிற சாதன நிலை ID போன்றவை.


இதுவரை வாங்கியவை

உங்கள் வாங்குதல்கள் அல்லது வாங்குதல் போக்குகள்.


பயன்பாட்டுத் தரவு

செயலி ஊடாடல்கள்
செயலி வெளியீடுகள், தட்டுதல், கிளிக்குகள், ஸ்க்ரோலிங் தகவல், இசை கேட்கும் தரவு, வீடியோ காட்சிகள், கேம், வீடியோ அல்லது பாடலில் சேமிக்கப்பட்ட இடம் அல்லது நீங்கள் செயலியுடன் எப்படித் தொடர்புகொள்கிறீர்கள் என்பது போன்ற பிற தகவல்கள்.

விளம்பரத் தரவு
நீங்கள் பார்த்த விளம்பரங்கள் பற்றிய தகவல்கள் போன்றவை.

பிற பயன்பாட்டுத் தரவு
செயலியில் உங்கள் செயல்பாடு குறித்த பிற தரவும் உள்ளடங்கும்.


கண்டறிதல்கள்

சிதைவுத் தரவு
சிதைவுப் பதிவுகள் போன்றவை.

செயல்திறன் தரவு
வெளியீட்டு நேரம், ஹேங் ரேட் அல்லது ஆற்றல் பயன்பாடு போன்றவை.

பிற பழுதறிதல் தரவு
செயலியுடன் தொடர்புடைய தொழில்நுட்ப பழுதறிதல்களை அளவிடுவதற்காகச் சேகரிக்கப்பட்ட பிற தரவு.


பிற தரவு வகைகள்

குறிப்பிடப்படாத பிற தரவு வகைகள்.


தரவுப் பயன்பாடு

விளம்பரம் அல்லது சந்தைப்படுத்துதல்

மூன்றாம் தரப்பு விளம்பரங்கள்
செயலியில் மூன்றாம் தரப்பு விளம்பரங்களைக் காட்டுதல் அல்லது மூன்றாம் தரப்பு விளம்பரங்களைக் காட்டும் நிறுவனங்களுடன் தரவைப் பகிர்தல் போன்றவை.

டெவலப்பரின் விளம்பரம் அல்லது சந்தைப்படுத்தல் டெவலப்பரின் சொந்த விளம்பரங்களைச் செயலியில் காண்பித்தல், சந்தைப்படுத்தல் தகவல்தொடர்புகளை உங்களுக்கு நேரடியாக அனுப்புதல் அல்லது உங்களுக்கு விளம்பரங்களைக் காட்டும் நிறுவனங்களுடன் தரவைப் பகிர்தல் போன்றவை.


பகுப்பாய்வுகள்

ஏற்கெனவே உள்ள தயாரிப்பு அம்சங்களின் செயல்திறனைப் புரிந்துகொள்வது, புதிய அம்சங்களைத் திட்டமிடுவது அல்லது பார்வையாளர்களின் எண்ணிக்கை அல்லது பண்புகளை அளவிடுவது உட்பட, உங்கள் நடத்தையை மதிப்பீடு செய்ய தரவைப் பயன்படுத்துகிறது.


தயாரிப்பைத் தனிப்பயனாக்குதல்

பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்புகள், பதிவுகள் அல்லது பரிந்துரைகளின் பட்டியல் போன்ற நீங்கள் பார்க்கும் விஷயங்களைப் பிரத்தியேகமாக்குதல்.


செயலியின் செயல்பாடு

செயலியில் உங்களை அங்கீகரிப்பது, அம்சங்களைச் செயல்படுத்துதல், மோசடியைத் தடுப்பது, பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துதல், சர்வர் இயக்க நேரத்தை உறுதிசெய்தல், செயலிச் செயலிழப்புகளைக் குறைத்தல், அளவிடுதல் மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல் அல்லது வாடிக்கையாளர் ஆதரவைச் செயல்படுத்துதல் போன்றவை.


பிற நோக்கங்கள்

பட்டியலிடப்படாத பிற பயன்பாடு.


உங்களுடன் இணைக்கப்பட்ட தரவு

உங்கள் அடையாளத்துடன் (அதாவது உங்கள் கணக்கு, சாதனம் அல்லது பிற விவரங்கள் மூலம்) இணைக்கப்பட்டுள்ள தரவு.

தொடர்புடைய தனியுரிமைச் சட்டங்களின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி, “தனிப்பட்ட தகவல்” மற்றும் “தனிப்பட்ட தரவு” உங்களுடன் இணைக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றன. தரவு உங்களுடன் இணைக்கப்படாமல் இருக்க, டெவலப்பர் அவற்றைச் சேகரித்த பிறகு சில செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்:

• உங்கள் அடையாளத்துடன் தரவை மீண்டும் இணைக்க அவர்கள் முயலக்கூடாது.

• உங்கள் அடையாளத்துடன் இணைக்க உதவும் பிற தரவுத்தொகுப்புகளுடன் அவை தரவை இணைக்கக் கூடாது.


உங்களுடன் இணைக்கப்படாத தரவு

உங்கள் அடையாளத்துடன் (அதாவது உங்கள் கணக்கு, சாதனம் அல்லது பிற விவரங்கள் மூலம்) இணைக்கப்படாத தரவு.


உங்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் தரவு

கண்காணிப்பு
விளம்பரத்தை அளவிடுதல் அல்லது இலக்கிடப்பட்ட விளம்பரத்திற்காக உங்களைப் பற்றியோ உங்கள் சாதனத்தைப் பற்றியோ சேகரிக்கப்பட்ட தகவல்கள் மூன்றாம் தரப்பினரின் தகவல்களுடன் இணைக்கப்ட்டிருக்கும்போது, கண்கானித்தல் மேற்கொள்ளப்படும். மேலும் உங்களைப் பற்றிய தகவலையோ உங்கள் சாதனம் பற்றிய தகவலையோ தரவு தரகருடன் பகிரப்படும்போதும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

பின்வரும் சூழ்நிலைகளில் கண்காணிப்பை மேற்கொள்ள முடியாது:

• தரவு உங்கள் சாதனத்தில் மட்டுமே இணைக்கப்பட்டு, உங்களையோ உங்கள் சாதனத்தையோ அடையாளங்காணக்கூடிய வகையில் சாதனத்திலிருந்து அனுப்பப்படாமல் இருந்தால்.

• ஒரு தரவு தரகர் டெவலப்பர் சார்பாக பிரத்தியேகமாகச் செயல்படும்போது, ​​வழங்கப்பட்ட தரவைப் பாதுகாப்பு அல்லது மோசடி கண்டறிதல் மற்றும் தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்துகிறது.

மூன்றாம் தரப்பு

மூன்றாம் தரப்பு தரவு என்பது டெவலப்பருக்குச் சொந்தமானதல்லாத செயலிகள், இணையதளங்கள் அல்லது ஆஃப்லைன் பண்புகளிலிருந்து சேகரிக்கப்பட்ட உங்களைப் பற்றிய அல்லது உங்கள் சாதனத்தைப் பற்றிய தரவு ஆகும்.