

செயலி தனியுரிமை பற்றி மேலும் அறிக
இயல்பான செயலிப் பயன்பாட்டின்போது, டெவலப்பரோ அதன் மூன்றாம் தரப்புக் கூட்டாளர்களோ சேகரிக்கக்கூடிய தரவின் வகைகள் பற்றிய தகவல்களைச் ‘செயலித் தனியுரிமைப்’ பிரிவு உள்ளடக்கியிருக்கும், எனினும் டெவலப்பரின் அனைத்து நடைமுறைகளையும் அது விவரிக்காது. உங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவும் இந்தப் பிரிவில் காட்டப்பட்டுள்ளவற்றிலிருந்து வேறுபடலாம். எடுத்துக்காட்டாக, சேகரிக்கப்பட்ட தரவு நீங்கள் பயன்படுத்தும் அம்சங்கள், நீங்கள் செயலியின் கட்டணப் பதிப்பை மட்டுமே பயன்படுத்துகிறீர்களா அல்லது நீங்கள் ஒரு சிறாரா என்பதைப் பொறுத்து மாறுபடலாம்.
கூடுதலாக, சேகரிக்கப்பட்ட தரவு பின்வரும் நிபந்தனைகளுக்கு இணங்கும்போது டெவலப்பர்கள் இந்தப் பிரிவில் தரவைப் பட்டியலிட வேண்டிய அவசியமில்லை:
• நீங்கள் செயலியின் பயனர் இடைமுகத்தில் நேரடியாகச் செயலிக்குத் தரவை வழங்குகிறீர்கள்.
• நீங்கள் சமர்ப்பிக்கும் தரவுடன் உங்கள் பெயர் அல்லது கணக்குப் பெயர் தெளிவாகத் தெரிகிறது.
• தரவைச் சமர்ப்பிப்பது விருப்பத்தின் அடிப்படையிலானது, அதாவது செயலியின் செயல்பாட்டிற்காக நீங்கள் தரவை வழங்கத் தேவையில்லை.
• ஒவ்வொரு முறையும் தரவைச் சேகரிக்க நீங்கள் உறுதியுடன் தேர்வு செய்கிறீர்கள்.
• தரவுச் சேகரிப்பு, செயலியின் முதன்மைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இல்லாத அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நிகழ்கிறது.
• செயலியின் செயல்திறன், பிரத்தியேகமாக்குதல் அல்லது பகுப்பாய்வு ஆகியவற்றுக்காக மட்டுமே தரவு பயன்படுத்தப்படுகிறது. மேலும் செயலிகள் அல்லது இணையதளங்களில் உங்களைக் கண்காணிக்கவோ உங்களுக்கு விளம்பரங்களைக் காட்டவோ அது பயன்படுத்தப்படவில்லை.
ஒழுங்கமைக்கப்பட்ட நிதிச் சேவைகள் அல்லது சுகாதார ஆராய்ச்சியை எளிதாக்கும் சில செயலிகளுக்கு, டெவலப்பர்கள் பின்வரும் சூழ்நிலைகளில் ‘செயலியின் தனியுரிமைப்’ பிரிவில் தரவைப் பட்டியலிட வேண்டாம் என்று தேர்வுசெய்யலாம்:
ஒழுங்கமைக்கப்பட்ட நிதிச் சேவைகளைச் செயல்படுத்தும் செயலியால் தரவு சேகரிக்கப்படுகின்றன, மேலும்:
• உங்களிடமிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட தரவைச் சேகரிப்பது விருப்பத்தின் அடிப்படையிலானது மற்றும் செயலியின் முதன்மைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இல்லாத சந்தர்ப்பங்களில் மட்டுமே அது நிகழ்கிறது.
• உங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவு, அதனுடன் தொடர்புடைய நிதிச் சேவைகள் அல்லது தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள் அல்லது ஒழுங்குமுறைகளின் தனியுரிமை அறிவிப்பின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
• பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உங்களுக்குச் சந்தைப்படுத்த, உங்கள் தரவு தொடர்பில்லாத மூன்றாம் தரப்பினருடன் பகிரப்படவில்லை என்று தனியுரிமை அறிவிப்பு கூறுகிறது.
• மோசடி தொடர்பான விவரங்கள் தவிர அல்லது தரவுத் தரகர் ஒரு நுகர்வோர் தகவல் வழங்கும் ஏஜென்சியாக இருந்து, கிரெடிட் அறிக்கையிடல் நோக்கங்களுக்காகத் தரவு பகிரப்படுதைத் தவிர, உங்கள் தரவு விளம்பர நோக்கங்களுக்காக மூன்றாம் தரப்புத் தரவுடன் இணைக்கப்படவோ தரவுத் தரகருடன் பகிரப்படவோ இல்லை.
உங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவு ஒரு தகவலறிந்த ஒப்புதல் படிவத்திற்கு உட்பட்டது, அதில் நீங்கள் சுகாதார ஆராய்ச்சி ஆய்வின் ஒரு பகுதியாக இருக்க ஒப்புக்கொண்டுள்ளீர்கள், இது ஒரு நிறுவன மறுஆய்வு போர்டு அல்லது நெறிமுறை மறுஆய்வு போர்டால் மறுஆய்வுச் செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மேலும் செயலிகள் அல்லது இணையதளங்களில் உங்களைக் கண்காணிக்க இது பயன்படுத்தப்படவில்லை.
டெவலப்பர்களுக்கு அணுகல் இல்லாத சாதனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் சேகரிக்கப்பட்ட தரவு இந்தப் பிரிவில் இல்லை. இந்தச் சந்தர்ப்பங்களில் சேகரிக்கப்பட்ட தரவு, உங்கள் Apple கணக்கு, உங்கள் சாதனங்கள் மற்றும் பிற Apple சேவைகளை நீங்கள் அமைக்கும்போது, அவை தனித்தனியான வெளிப்பாடுகள் மூலம் உங்களுக்குக் காட்டப்படும்.
டெவலப்பரால் சேகரிக்கப்பட்ட தரவு மற்றும் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, டெவலப்பரின் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.