

கேம் கன்ட்ரோலரைக் கொண்டு விளையாடுங்கள்
இணக்கமான சாதனங்களைக் கண்டறிந்து இணைக்கவும்.
App Storeஇல் கன்ட்ரோலர்களைப் பயன்படுத்தி விளையாடக்கூடிய கேம்களை விளையாட விரும்புகிறீர்களா? ஒரு கேமில் கன்ட்ரோலர் இணக்கமாக இருந்தால், அதன் தயாரிப்புப் பக்கத்தில் ஆதரிக்கக்கூடிய கன்ட்ரோலர் பட்டியலைப் பெறுவீர்கள். சில சந்தர்ப்பங்களில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதற்காக, கேமின் டெவலப்பர்கள் கன்ட்ரோலரைப் பயன்படுத்தக்கூட பரிந்துரைக்கலாம்.
பிளே செய்ய, நீங்கள் எந்தக் கன்ட்ரோலரைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து, Bluetooth அல்லது லைட்னிங் போர்ட் வழியாக உங்கள் Apple சாதனத்துடன் உங்கள் கன்ட்ரோலரை இணைக்க வேண்டும். இணக்கமான கன்ட்ரோலர்களின் முழு பட்டியலையும், பிளே செய்யத் தயாராவதற்கான படிப்படியான அறிவுறுத்தல்களையும் பெறுவதற்கும், மேலும் அனைத்து விவரங்களையும் அறிய ‘Apple உதவி’ தளத்தைப் பார்க்கவும்.
உங்கள் கன்ட்ரோலரை இணைத்த பிறகு, ‘அமைப்புகள் > பொது > கேம் கன்ட்ரோலர்’ என்பதற்குச் சென்று உங்கள் சொந்த சுயவிவரங்களைச் சேர்ப்பதன் மூலம் கூடுதல் பிரத்தியேகக் கட்டுப்பாடு விருப்பங்களைக் கண்டறியவும், இதில் ஸ்கிரீன்ஷாட்களை எடுப்பதற்கும், கேம்பிளே வீடியோவைப் பதிவு செய்வதற்கும் விருப்பமான உள்ளீடுகள் சேர்க்கலாம்.
உங்களிடம் ஏற்கெனவே கன்ட்ரோலர் இல்லையென்றால், அதற்கென கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வை நீங்கள் பார்க்கலாம்.